ரெகுநாதபுரம் : வண்ணாங்குண்டு அருகே கிருஷ்ணாபுரம் காந்தாரியம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவ விழா நடந்தது. ஜூன் 26., அன்று காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது.நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள திடலில் ஏராளமானபக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.நேற்று காலை காந்தாரி அம்மன், சித்தி விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.