திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2022 06:07
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்மர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை நடந்தது.
திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை சாதிக்கிறார். இத்தலத்தில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான நரசிம்ம பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது . விழாவை முன்னிட்டு, இன்று கருடசேவை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கவெனிதா செய்துள்ளார்.