சதுரகிரி பவுர்ணமி வழிபாடு; நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2022 05:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. ஜூலை 11 முதல் ஜூலை 14 வரை நான்கு நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் முக கவசம் அணிந்தும், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் மற்றும் சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.