காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர அறநிலைத்துறை ஆணையாளர் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2022 06:07
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில அறநிலைத்துறை ஆணையாளர் ஹரி ஜவஹர்லால் குடும்பத்தாரோடு இன்று சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு, கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர்.
கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.மேலும் கோயில் வேத பண்டிதர்களால் சிறப்பு ஆசிர்வாதம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளியில் வந்த அறநிலையத்துறை ஆணையாளர் ஹரி ஜவஹர்லால் பேசுதையில் கோயிலில் மாஸ்டர் பிளான் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தற்போதுள்ள அறங்காவலர் குழு பதவி காலம் நிறைடைவதற்குள் பணிகளை தொடங்கி நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். பின்னர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு ஹரி ஜவஹர்லாலிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார் . அந்த மனுவில் கோயிலில் வார இறுதியில் சமீப காலமாக நாகப்படகுகள் தட்டுப்பாடு ஏற்படுவதால் அதனை தயாரிக்கும் மையத்தில் "மின்ட்" யில் கூடுதல் ஊழியர்களை ஏற்பாடு செய்ய அனுமதி கோரினார்.அதேபோல் கோயிலுக்கு சொந்தமான "கோ" சாலையிலும் கூடுதல் ஊழியர்களை நியமிக்க அனுமதி கோரிக்கை விடுத்தார். அதற்கு அறநிலையத்துறை ஆணையாளர் அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .இதனைத் தொடர்ந்து ஹரி ஜவஹர்லால் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபுவிடம் பேசுதையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் மீது சமீபத்தில் அதிக அளவில் விமர்சனங்கள் எழுந்த வன்னம் உள்ளதாகவும் இதனால் அரசுக்கு நல்ல பெயர் வராது என்றும் இனிமேல் இதுபோன்று நடக்காமல் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதே போல் கோயிலில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் யாரேனும் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.