மட்டங்கிபட்டி அய்யணார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2022 10:07
மேலூர்: மட்டங்கிபட்டி அய்யணார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 3 முதல் பக்தர்கள் விரதமிருந்தனர் எட்டாம் நாள் முடிவில் நேற்று புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது மந்தை கருப்பண்ண சுவாமி கோயில் முன்பு வைக்கப்பட்டிருந்த கிராமத்துக்கு சொந்தமான மற்றும் பக்தர்களின் புரவிகள் அங்கிருந்து 1 கி.மீ.. தொலைவில் உள்ள கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இத் திருவிழா கொண்டாடப்படுவது குறிப்பிடதக்கது.