கோவை, சின்னவேடம்பட்டியில் உள்ள கவுமார மடாலயத்தில் 10 லட்ச சுப்ரமணிய ஆயிரத்தெட்டு நாம அர்ச்சனை பெரு விழா நேற்று துவங்கியது.
கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள கவுமார மடாலயத்தில் தண்டபாணி திருக்கோயிலில் நேற்று நாம அர்ச்சனை பெருவிழா துவங்கியது. வரும் ஜூலை 14 வரை நடக்கும் இந்த அர்ச்சனை பெருவிழாவை, சிரவையாதீனம் குமரகுரு சுவாமிகள் தலைமையில் நடந்து வருகிறது. உலக நலன் வேண்டி சகஸ்ர சுப்ரமணிய சப்தசமி மகாவேள்வி 10 லட்ச சுப்ரமணிய ஆயிரத்தெட்டு நாம அர்ச்சனை நேற்று மாலை துவங்கியது. இந்த நிகழ்வின் நான்காம் நாள் ஜூலை 13ல் எட்டு கால வேள்விகள் நடக்கிறது. தொடர்ந்து, அன்று மாலை 10 லட்சம் சுப்ரமணிய ஆயிரத்தெட்டு நாம அர்ச்சனை பெருவிழா பேரொளி வழிபாடு நடக்கிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில், பத்துக் கால வேள்விகள் நிறைவுற்று, திருமுறை திருப்புகழ் விண்ணப்பத்துடன் நிறைவு பெறுகிறது. மாலை தண்டபாணி கடவுளுக்கு மலர் வழிபாடும் தொடர்ந்து பேரொளி வழிபாடும் நடைபெறுகிறது.