கவுமாரியம்மன் கோயில் திருவிழா இன்று முதல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2022 06:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி பெருந் திருவிழா இன்று முதல் துவக்கம்.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் கவுமாரியம்மன் பிரசித்தி பெற்ற கோயிலாகும். ஆயிரம் கண்ணுடையாளாக அம்மன் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் வழங்குவதால் தென் மாவட்டத்தில் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலில் திருவிழா காலங்களில் வந்து செல்வது வழக்கம். திருவிழா துவக்கம்: ஜூலை 5ல் சாட்டுதலுடன் கோயில் முன்பு கம்பம் நடப்பட்டது. தினமும் ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் எடுத்து ஊற்றி வருகின்றனர். இன்று (ஜூலை 11) கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. தினமும் அம்மன் குதிரை, ரிஷபம், சிம்மம், அன்னபட்சி, யானை, மின் ஒளி, பூ பல்லாக்கில் உலா வருகிறார் முக்கிய திருவிழாவான ஜூலை 19 மாவிளக்கு உற்சவமும் மறுநாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்கினி சட்டி நேற்று அம்மனை வழிபடுகின்றனர் ஜூலை 26 ல் மறுபூஜை ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மண்டபம் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.