பூட்டை மாரியம்மன் கோவில் விழாவில் ரூ.1.5 லட்சம் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2012 11:08
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் தேர்த் திருவிழாவில் உண்டியல் மூலம் பக்தர்கள் 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடந்தது. தேர்த் திருவிழாவில் சங்கராபுரம் பகுதியை சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். திருவிழா முடிந்து நேற்று அறநிலைய துறை உதவி ஆய்வாளர் தங்கராஜ், ஊராட்சி தலைவர் கந்தசாமி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. அதில் பக்தர்கள் காணிக்கையாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியிருந்தனர்.