விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி வழுதரெட்டி, சுப்ரமணியசுவாமி நகர் முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 10:30 மணிக்கு கரகம் ஜோடித்து, ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று, அம்மனுக்கு கூழ் படையல் செய்து வழிபட்டனர். இதில், முத்தலாம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, மாலை 6:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் மற்றும் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.