பதிவு செய்த நாள்
23
ஜூலை
2022
04:07
சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந் திருவிழா காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்,
சனீஸ்வர பகவான் சுயம்புவாக மூலவராக எழுந்தருளியுள்ள கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் குச்சனுாரில் மட்டுமே உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் இங்கு பெருந்திருவிழா கொண்டாடப்படும், ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். இந்தாண்டிற்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கலிப் பனம் கழித்து, சுத்த நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் காலை 11,30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பூலாநந்தபுரம் ராஜகம்பளம் அமரர் மாரைய நாயக்கர் உறவின் முறையை சேர்ந்தவர்கள் சுத்த நீர் தெளித்தனர். இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கொடியேற்றத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஜூலை 30 இரண்டாவது வாரம், ஆக. 6. மூன்றாவது வாரம், ஆக.13 நான்காவது வாரம், ஆக.20 ஐந்தாவது வாரமாக திருவிழா ஐந்து சனிக்கிழமைகளில் கொண்டாடப்படும், இது தவிர ஆக. 5 ல் திருக்கல்யாணம், ஆக. 6 ல் சக்தி கரகம் எடுத்தல், அன்று இரவு 12 மணிக்கு மஞ்சனக் காப்பு சாத்துதல், ஆக.8 ல் லாட சித்தர் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டம் நடைபெறும் - ஆக.15 ல் சோணை கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.