பதிவு செய்த நாள்
13
ஆக
2012
10:08
சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கூறியுள்ள கருத்துக்களை ரமலான் காலத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
*இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி கிடப்பதால், விரைவில் முதுமை தட்டிவிடும்.
*உங்களில் எவரும் நின்று கொண்டு தண்ணீர் முதலியன குடிப்பது ஆகாது. மறந்த நிலையில், நின்று கொண்டு குடிப்பவர் அதற்குப் பரிகாரமாக அதை வாந்தி எடுத்து விட வேண்டும்.
*ஒட்டகம் போல தண்ணீர் குடிக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்றுமுறை மூச்சுவிட்டு குடிப்பதுடன் குடிக்கும் போது "பிஸ்மில்லாஹ் (எல்லாம் இறைவனால் நடக்கிறது) என்று கூறி குடியுங்கள். குடித்த பிறகு அல்ஹம்து லில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) என்று கூறுங்கள்.
*உங்களில் யாராவது, தம் இடது கையால் உண்ணுவதும் தண்ணீர் பருகுவதும் கூடாது. ஏனென்றால், ஷைத்தான் தனது இடது கையாலேயே குடிக்கின்றான், உண்ணுகின்றான்.
*வீண்செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள், குடியுங்கள். முடிந்தவரை தர்மமும் செய்யுங்கள்.
*உலகில் வயிறு நிரம்ப சாப்பிடுபவர்கள், கியாமநாளில் பசியுடையவர்களாக இருப்பார்கள்.
*இறைச்சியைத் தின்பது பற்றி நான் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனென்றால், நிச்சயமாக அதனை வழக்கமாக தின்பது, மதுபானம் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்வது போன்றதாகும். அல்லாமல், நிச்சயமாக வழக்கமாக (தினமும்) இறைச்சியைத் தின்னும் குடும்பத்தார் மீது இறைவன் கோபமடைகின்றான்.
*உணவில் பரக்கத் (இறைவனின் அருள்) நடுபாகத்தில் இறங்குகிறது. எனவே, ஓரத்தில் இருந்து உண்ணுங்கள். நடுப்பகுதியில் இருந்து உண்ணத் துவங்காதீர்கள். இந்த விதிமுறைகளுடன் இனியேனும் சாப்பிடுவீர்களா!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32