நாய் ஒன்று தன் குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது எதிரே சிங்கம் வருவதை பார்த்துவிட்டது. குட்டிகளை காப்பாற்ற அது தந்திரம் ஒன்றை செய்தது. அருகில் கிடந்த எலும்புகளை கடிக்க ஆரம்பித்தது. ‘ஆஹா.. எவ்வளவு ருசியா இருக்கு. இதேபோல் இன்னொரு சிங்கம் கிடைத்தால் போதும். என் குட்டிகளின் வயிறும் நிரம்பிவிடும்’ என சத்தமாக கூறியது. இதைக்கேட்டதும் சிங்கம் ஓட்டம் பிடித்தது. இதையெல்லாம் கவனித்த நரி ஒன்று சிங்கத்திடம் நடந்ததை சொல்லியது. அவ்வளவுதான் அதற்கு வந்ததே கோபம். உடனே நாய் இருக்கும் இடத்திற்கு சென்ற அது, ‘ஏய் என்னையா ஏமாற்றினாய்...’ என கர்ஜித்தது. நாய் சிரித்துக் கொண்டே, ‘நண்பா.. சொன்ன மாதிரியே இவனை என்னிடம் அழைத்து வந்துவிட்டாயே’ என நரியைப் பார்த்து சொன்னது. அவ்வளவுதான் நரியின் கதி ஒரு வழியானது. புத்திசாலித்தனத்தால் நாயும் தப்பியது. ‘நல்யோசனை உன்னைக் காப்பாற்றும். புத்தி உன்னைப் பாதுகாக்கும்’ என்கிறது பைபிள்.