வீடு முழுவதும் துர்நாற்றம். இதற்கு என்ன காரணம் என்றுகூட யோசிக்காமல், பலர் வாசனை நிறைந்த பொருட்களை வைப்பர். கொஞ்ச நேரம்தான் அதுதாக்குபிடிக்கும். மீண்டும் அதே துர்நாற்றம் நாசியை துளைக்க ஆரம்பிக்கும். இதுபோல்தான் நேர்மறை சிந்தனையும். எப்படி என்றால் ஒருவர் பிரச்னையில் உள்ளார். அவர் ‘எனக்கு பிரச்னையே இல்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று நேர்மறையாக சிந்திக்கிறார். அப்போது மனதில் தேவையில்லாத யுத்தம்தான் நடக்கும். சரி இதற்கு தீர்வுதான் என்ன? மகிழ்ச்சியான சூழல், துக்கமான சூழல் என எதுவாக இருந்தாலும் விலகி நில்லுங்கள். அதாவது நடுநிலையுடன் இருந்து அதை கவனியுங்கள். அப்போது மகிழ்ச்சிக்கு காரணமும், பிரச்னைக்கு தீர்வும் கிடைக்கும். இந்த மனநிலையை ஒருவர் எட்டிவிட்டால் துன்பமும், இன்பமும் ஒன்றுபோலவே அமையும். மகிழ்ச்சி எப்படி ஒரு அனுபவமோ, துன்பமும் ஒரு அனுபவம்தான்.