பதிவு செய்த நாள்
13
ஆக
2012
10:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஆவணி மூலத்திருவிழா, இன்று (ஆக.,13) காலை 10.05 மணிக்கு, கொடியேற்றத் துடன் துவங்குகிறது. ஆக., 30 வரை நடக்கும் இவ்விழாவில் தினமும், மீனாட்சி அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரர், வாகனங்களில் வீதி உலா வருவர். ஆக., 19ல், கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, 20ல் நாரைக்கு முக்தி கொடுத்தல், 21 ல் மாணிக்கம் விற்றல், 22 ல் தருமிக்கு பொற்கிழி அளித்தல், 23ல் உலவாக் கோட்டை அருளியது, 24 ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது ஆகிய லீலைகள் நடக்கின்றன. ஆக., 25 இரவு 7.33 மணிக்கு, சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில், சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. பின், வளையல் விற்ற லீலை, ஆக., 26 ல் நரியைப் பரியாக்கியது, 27 ல் பிட்டுக்கு மண் சுமந்தது, 28 ல் விறகு விற்றது ஆகிய லீலைகள் நடக்கின்றன. ஆக., 2 9ல் சப்தா வர்ணச் சப்பரத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளுகின்றனர். தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி ஜெயராமன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.