திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிபூர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2022 07:07
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான நேற்று ஆண்டாள்க்கு தைலக்காப்பு அபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா கடந்த 26 ம் தேதி துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு நித்திய பூஜை, 8:45 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறையை வந்தடைந்தார். 9:30 மணிக்கு விசேஷ நீராட்ட தைலக்காப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம், நான்காயிர திவ்ய பிரபந்த சேவை சாற்றுமரை, தீபாராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வளம் வந்து மூலஸ்தானம் எழுந்தள்ளினார். ஜீயர் ஸ்ரீ தெகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.