ஆழ்வார்குறிச்சி: சிவசைலம் சிவசைலநாதர்-பரமகல்யாணி அம்பாள் கோயிலில் நந்தி களபம் கோலாகலமாக நடந்தது.ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே சிவசைலத்தில் மேற்கு நோக்கிய மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் உள்ளது. இங்கு நந்தி களப வைபவம் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நந்தி களப நாளன்று காலையில் விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு கோலத்தில் நந்தி காட்சியளித்தல் வைபவமும், சிறப்பு நாட்டிய அலங்கார தீபாராதனையும் நடந்தது. சிறப்பு பூஜைகளை நாரம்புநாதபட்டர் நடத்தினார். ஏற்பாடுகளை ஆழ்வார்குறிச்சி முன்னார் கர்ணம் சாவடி சிதம்பரம்பிள்ளை குடும்பத்தினர் செய்திருந்தனர். கடையம் வில்வவனநாதர்-நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் நடந்த நந்தி களப வைபவத்தில் கட்டளைதாரர்கள் ஆழ்வார்குறிச்சி டாக்டர் கே.எஸ்.சபாபதி குடும்பத்தினர் முன்னிலையில் நந்திக்கு விஷேச அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் கூடிய தீபாராதனையை குமார்பட்டர், சுந்தர்பட்டர் நடத்தினர். மாலையில் நந்தி பகவான் சந்தன காப்பு கோலத்தில் காட்சி அளிக்கும் வைபவம் நடந்தது. இரவு சிறப்பு தீபாராதனை நடந்தது.