விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் அகஸ்தியர் கோயில் ஆடிக்கார்த்திகை சிறப்பு வழிபாடு நடந்தது.பாபநாசம் அகஸ்தியர் அருவி கோயிலில் ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை மற்றும் அகஸ்தியர் சுவாமிகளுக்கு காலை 8 மணிக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. 11 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி எழுந்தருளலும், அன்னதானமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோயில் கார்த்திகை கமிட்டியினர் செய்திருந்தனர்.