காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2022 08:07
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருவதோடு கோயிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம் கடந்த 16 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணி நேற்றுகாலை கோயில் ஊழியர்கள் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலிருந்த பணத்தை கணக்கிடப்பட்டது. இதில் பணமாக ஒரு கோடியே 11 லட்சத்து 65 ஆயிரத்து 495 ரூபாய்: தங்கம் : 28 கிராம், வெள்ளி :270 கிலோ அமெரிக்கா ,மலேசியா, கனடா, குவைத் போன்ற வெளி நாட்டு பணமாக 64 டாலர்கள் இருந்ததாக ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரியப்படுத்தினார்.