மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்தியங்கரா தேவி கோயிலில் நவசந்தி யாகம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2022 04:07
மானாமதுரை: மானாமதுரை அருகே வேதியேரேந்தல் விலக்கில் உள்ள மகா பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்த மகா சண்டி யாகம் நிறைவு பெற்றது.
மானாமதுரை வேதியரேந்தல் விலக்கில் உள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் வருடந்தோறும் ஒரு வார காலம் நவசண்டி யாகம் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.இந்த யாக விழாவில் மகா சுதர்சன ஹோமம்,புத்திர காமேஷ்டி ஹோமம், வனதுர்கா ஹோமம்,தசமகா வித்யா ஹோமம்,பஞ்சமுக பிரித்தியங்கிரா ஹோமம், நவசண்டி ஹோமம் உட்பட ஏராளமான ஹோமங்கள் தஞ்சை கணபதி சுப்ரமணியன் சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்றது.ஆடி அமாவாசை அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அன்னதானமும் நடைபெற்றது.ஒரு வார காலம் நடைபெற்ற இந்த யாக விழாவில் சிவகங்கை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஹோமத்திற்கான ஏற்பாடுகளை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா வேத தர்ம சேத்ரா டிரஸ்ட் நிர்வாகிகள் ஞானசேகரன் ராஜகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.