மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டியில் நாகசக்தி அம்மன் தியான பீடம் உள்ளது. இங்கு ஆடி இரண்டாவது வெள்ளி முன்னிட்டு, அம்மனுக்கு கர்ப்பிணி அலங்காரம் செய்யப்பட்டு, வளைகாப்பு நடத்தப்பட்டது. ஐந்து வகையான உணவுகள் படைக்கப்பட்டன. மேலும் குழந்தை இல்லாத, 21 பெண்களுக்கு கர்ப்பிணி போல வேடமிட்டு, வளைகாப்பு செய்யப்பட்டது. சிவசண்முக பாபு சாமி இதனை நடத்தினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அதுபோல் போத்தனூர் " சர்ச் ரோட்டிலுள்ள அருள்முருகன் கோவிலில் காலையில் துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. மாலை விளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.