பதிவு செய்த நாள்
05
ஆக
2022
02:08
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் வைபவத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நத்தத்தில் 400 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஜூன் 17 பாலாலய விழாவுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. இதையொட்டி மாவட்ட கவுன்சிலர் விஜயன் ஏற்பாட்டில் கோவில் வளாகம் மற்றும் கோபுரம், சிற்பங்களுக்கு வண்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை அமைக்கும் பணிக்காக கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அபிஷே அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் பக்தர்கள் முகூர்த்த காலுடன் கோவிலை சுற்றி வந்து வேத மந்திரங்கள் முழங்க முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.பி.என்.கண்ணன், மாவட்ட கவுன்சிலர் விஜயன், நத்தம் பேரூராட்சி சேர்மன் சேக் சிக்கந்தர் பாட்ஷா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், நகரச் செயலாளர் ராஜ்மோகன், அ.தி.மு.க., நிர்வாகிகள் சிவலிங்கம், ஜெயபாலன், மணிகண்டன் மற்றும் வட்டாட்சியர் சுகந்தி, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார், நத்தம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முனியாண்டி, கோவில் அறநிலைத்துறை அலுவலர் வாணி மகேஸ்வரி, கோவில் பரம்பரை அறக்கையாளர் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.