பதிவு செய்த நாள்
13
ஆக
2012
05:08
நவக்கிரகங்களால் வாழ்வில் நன்மையும், சிரமமும் ஏற்படுகிறது. இவற்றால் ஏற்படும் தோஷத்தைப் போக்கும் விதத்தில் ஒன்பது சிவலாயங்களும், ஒன்பது பெருமாள் கோயில்களும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன. பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்றத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய தலங்கள் நவகைலாயம் எனப்படும். இங்கு சிவபெருமான் தேவியருடன் அருள்பாலிக்கிறார். ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டைத் திருப்பதி, பெருங்குளம், திருக்கோளூர், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி ஆகிய தலங்களை நவதிருப்பதி என்று குறிப்பிடுவர். இந்த பெருமாள் தலங்களை ஒரே நாளில் தரிசித்தால் நவக்கிரகங்களால் உண்டாகும் தீமை அகலும். இதில் நவகைலாயத்தை சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்களிலும், நவதிருப்பதியை ஏகாதசி மற்றும் திருவோண நட்சத்திரத்திலும் தரிசிப்பது சிறப்பு. இரண்டே நாட்களில் பதினெட்டு கோயில்களையும் தரிசித்து விடலாம்.