பதிவு செய்த நாள்
08
ஆக
2022
05:08
நந்திவரம்: கூடுவாஞ்சேரி, கிருஷ்ணாபுரத்தில் உள்ள திருவீதி அம்மன் கோவில், 35ம் ஆண்டு ஆடி மாத திருவிழா நடக்கிறது.நேற்று காலை, அம்மனுக்கு நான்காம் வார அபிஷேகம் நடந்தது. காலை 11:30 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை 6.00 மணிக்கு கும்பம் படையல் நடந்தது.தொடர்ந்து, பெண் பக்தர்கள், கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு, அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.இரவு 7:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணாபுரம் முதல் மற்றும் இரண்டாவது தெரு, ராணி அண்ணா நகர் போன்ற பகுதிகளில், அம்மன் வீதியுலா நடந்தது.அம்மன் வீதி உலா வந்த தெருவில், ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர், அம்மனுக்கு மாலை சாற்றி, தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.கிருஷ்ணாபுரம், சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிருஷ்ணாபுரம் பகுதிவாழ் மக்கள் செய்தனர்.