கடப்பாக்கம், : விளம்பூர் கிராமத்தில் முத்தாலம்மன், பொன்னியம்மன் கோவில் 75ம் ஆண்டு ஆடி உற்சவம், விமரிசையாக நடந்தது.கடப்பாக்கம் அடுத்த விளம்பூர் கிராமத்தில், முத்தாலம்மன், பொன்னியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் 75ம் ஆண்டு ஆடி உற்சவம், கடந்த 31ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியான பால் சாகை வார்த்தல் நிகழ்ச்சி, நேற்று மதியம் 2:45 மணிக்கு கோவில் வளாகத்தில் நடந்தது.காவடி எடுத்தல், பழம் குத்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை, பக்தர்கள் செலுத்தினர்.இரவு, மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் வீதியுலா நடந்தது. விளம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் நுாற்றுக்கணக்கானேர் பங்கேற்றனர்.