வாரியாரின் தந்தை மல்லையதாசர் 1933ல், காங்கேயநல்லூர் முருகன் கோவிலில் ராஜகோபுரத் திருப்பணி செய்ய விரும்பினார். அதற்கான பணம் இல்லாததால், தன் குருநாதர் திருப்புகழ் ஐயரின் ஆசி பெற மதுரை வந்தார். திருப்புகழ் ஐயர், மல்லையதாசரிடம்,ஒரு ரூபாயை மூலதனமாகக் கொண்டு கோவில் பணியைத் தொடங்கு. உன்ஊரிலேயே தேவையான பணம் கிடைக்கும். விரைவில் திருப்பணி நிறைவேறும், என்று ஆசியளித்தார். அதை வேத வாக்காக மதித்து மல்லையதாசரும் ஊர் திரும்பினார். ஊரார் ஒத்துழைப்பால், மூன்றே மாதத்தில் திருப்பணி நிறைவேறியது. திருப்புகழ் ஐயரின் தலைமையில் கும்பாபிஷேகம் சிறப்பாக முடிந்தது. திருப்பணி செலவால் மல்லையதாசர் 5000 ரூபாய் கடன்பட்டிருந்தார். அந்த கடனைச் செலுத்த எண்ணிய வாரியார், தந்தைக்குத் தெரியாமலே சென்னையிலுள்ள கோவில்களில் சொற்பொழிவு நடத்தத் தொடங்கினார். பின்னாளில் அதுவே முழு நேர பணியாகி விட்டது.