வானூர்: இரும்பை மஹாகாளேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பிரதோஷ வழிபாடு நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் இரும்பையில் உள்ள 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்பை மஹாகாளேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. அதையொட்டி மூலவர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பழங்கள் உள்பட 11 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் உற்சவர்கள் மதுசுந்தர நாயகி சமேத மஹாகாளேஸ்வரர் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.