தர்மபுரி, ஆடிமாத மூன்றாம் செவ்வாய்கிழமையை முன்னிட்டு, தர்மபுரி கோட்டை கோவில் வளாகத்திலுள்ள துர்காம்பிகை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தர்மபுரி, கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் வளாகத்தில் துர்காம்பிகை அம்மன் உள்ளது. இக்கோவிலில், தமிழகத்தை ஆண்ட பல்வேறு மன்னர்கள் வழிபட்டு வந்துள்ளனர். இதிலுள்ள சூலினி ராஜ துர்க்காம்பிகை சுயரூப திருக்காட்சி நேற்று நடந்தது. நேற்று காலை மஹா அபிஷேக வழிபாடும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, இம்மாதம் வளர்பிறை அஷ்டமியான நாளை மறுநாள், மகிஷாசூரன் எருமை தலையுடனும் மனித உடலும் கொண்டு வீழ்ந்திருக்க, சூலினி மகிஷனை வதம் புரியும் காட்சி அலங்காரம் செய்யப்பட உள்ளது.