ஆழ்வார்குறிச்சி:அருணாசலம்பட்டி பிரம்மசக்தி சுடலைமாடசாமி கோயிலில் கொடை விழா நேற்று துவங்கியது.அருணாசலம்பட்டியில் பிரம்மசக்தி சுடலைமாடசாமி கோயில் உள்ளது. இங்கு ஆடி மாத கொடைத் திருவிழா நேற்று துவங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும், இரவு நெல்லை மியூசிக் ஸ்டார் குழுவினரின் இன்னிசை கச்சேரியும், சிறப்பு பூஜையும், விசேஷ அலங்காரத்தில் அம்பாள் காட்சியளித்தலும் நடந்தது.கொடைத் திருவிழாவான இன்று (14ம் தேதி) காலையில் சிறப்பு பூஜையும், மதியம் அன்னதானமும், இரவு விக்கிரமசிங்கபுரம் ராமர் குழுவினரின் வில்லிசை கச்சேரியும், பின்னர் சாமிக்கு படைப்பு தீபாராதனை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.