சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி திருக்கல்யாண உத்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2026 08:03
அய்யங்கார்குளம்: மாசி மாத உத்திர நட்சத்திரத்தையாட்டி, அய்யங்கார்குளம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 25வது ஆண்டு வள்ளி திருக்கல்யாண உத்சவம் நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வாரியார் நற்பணிமன்றம் சார்பில், ஆண்டுதோறும், மாசி மாத உத்திர திருநட்சத்திர தினத்தன்று வள்ளி திருகல்யாண உத்சவம் நடந்து வருகிறது.அதன்படி, உத்திர நட்சத்திர தினமான நேற்று முன்தினம் 25வது ஆண்டு வள்ளி திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், மாலை 6:00 மணிக்கு மாற்று நிகழ்வும், இரவு 10:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமிக்கும், வள்ளிக்கும் திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. நேற்று அதிகாலை சுவாமி வீதியுலாவும், மதியம் 12:00 மணி திருமண விருந்தும் நடந்தது. திருக்கல்யாண உத்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.