பழநி: பழநியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சில சமுதாயத்தினர் பூணூல் மாற்றும் வைபவத்தில் ஈடுபட்டனர். பழநியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ஹிந்து கலாச்சாரத்தில் சில சமூகத்தினர் பூணூல் மாற்றிக் கொள்ளும் பழக்கம் உள்ளது. அதன்படி பூணூல் மாற்றும் வைபவத்தைக் கொண்டாடும் அச்சமுதாயத்தினர் வீடுகளிலும், மடங்களிலும் பூணூல் மாற்றிக் கொண்டனர். பழநி அர்ச்சகர் ஸ்தானிக சங்கத்தின் சார்பில் தெற்கு ரத வீதியில் உள்ள சங்க கட்டிடத்திலும், தெற்கு ரதவீத வீதியில் உள்ள வாசவி மஹாலில் ஆரிய வைசிய சமஜத்தின் சார்பிலும், பழநி டவுன் விஸ்வ பிராமண மகாஜன சங்கத்தின் சார்பில் அடிவாரம், சன்னதி வீதியில் விஸ்வா நிலையத்திலும், சார்பில், ஆயிரவைசிய சமுதாயதினர் சன்னதி வீதியில் உள்ள மடத்திலும், பூணூல் வைபவம் நடைபெற்றது.