திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1008 விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2022 04:08
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொரோனா தடை தளர்விற்கு பின்பு 2 ஆண்டுகளுக்குப் பின்பு 1008 விளக்கு பூஜை நடந்தது.
கோயில் சார்பில் திருவாட்சி மண்டபத்தில் மூன்று அடி வெள்ளி விளக்கும் கம்பத்தடி மண்டபம், உற்சவர் சன்னதி, மடப்பள்ளி மண்டபம், ஆஸ்தான மண்டபங்களில் 3 அடி பித்தளை விளக்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டன. கோயில் சிவாச்சாரியார்கள் விளக்குகளில் தீபம் ஏற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து கோயில் அனைத்து மண்டபங்களிலும் இருந்த பெண் பக்தர்கள் விளக்குகளில் தீபம் ஏற்றி பூஜை செய்தனர். தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி: மாணவர்களின் படிப்பு செழிக்கவும், உலக நன்மை வேண்டியும் அனுஷா தேவி அறக்கட்டளை சார்பில் கல்லூரியில் 1008 விளக்கு பூஜை நடந்தது. கூடலழகர் பெருமாள் கோயில் உதவி கமிஷனர் செல்வி துவக்கி வைத்தார். கோயில் சிவாச்சாரியார்கள் பிரதான விளக்கில் தீபம் ஏற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து மாணவியர் விளக்குகள் தீபம் ஏற்றி பூஜை நடத்தினர். அறக்கட்டளை உபயதாரர் மகாலட்சுமி தர்மராஜ், கல்லூரி தலைவர் ராஜகோபால், உப தலைவர் ஜெயராம், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார் சாமி, உதவி செயலாளர் ராஜேந்திர பாபு, முதல்வர் வெங்கடேஸ்வரன் இயக்குனர் பிரபு பேராசிரியர்கள் பங்கேற்றனர். பேராசிரியர்கள் பவானி, பரிமளா விழா ஏற்பாடுகள் செய்தனர்.