சிலர் எப்போதும் பிறரை குறைகூறிக்கொண்டே இருப்பர். இதனால் யாருக்காவது பயன் இருக்கா? என யோசிப்பதில்லை. ஆனால் மார்க்கஸ் ஓரியாலிஸ் யோசித்தார். அவர்தான் முன்பு இத்தாலியை ஆட்சி செய்தவர். இவர் ‘மெடிடேஷன்’ என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த புத்தகத்தில், அவர் தன்னை பற்றி மட்டுமே சொல்லியுள்ளார். காரணம் பிறரது குறையை குறித்து சிந்திக்கவே மாட்டார். இதனால் அவர் மனமும் நிறைவானதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார். பார்த்தீர்களா... இவரைப்போல் நாமும் வாழ்ந்தால் மனஅழுத்தமே வராது அல்லவா. பிறரை குறைகூறுவதால் அவர்கள் மாறப்போகிறார்களா? இல்லை. உலகத்தில் ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகத்தான் இருப்பர். அதையெல்லாம் நம்மால் சரி செய்யமுடியாது. எனவே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கையை ரசியுங்கள்.