காஞ்சிபுரம் தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2022 11:08
காஞ்சிபுரம் : திருக்காலிமேடு எம்.ஜி.ஆர்., தேவி கருமாரியம்மன் கோவிலில் நான்காம் ஆண்டு ஆடித்திருவிழா நடந்தது.காஞ்சிபுரம் திருக்காலிமேடு எம்.ஜி.ஆர்., நகரில் தேவி கருமாரியம்மன் கோவிலில் நான்காம் ஆண்டு ஆடித்திருவிழா 12ல் துவங்கியது. அன்று காலை 7:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, அம்மனுக்கு, 108 பால்குட ஊர்வலம் நடந்தது.விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், தொடர்நது கிரகம் ஜோடிப்பு ஊர்வலம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு கூழ்வார்க்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.