திருச்செந்துார் ஆவணி திருவிழா சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்தில் சுவாமி எழுந்தருளல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2022 09:08
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி குமரவிடங்கபெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்தில் எழுந்தருளினார். நாளை இரவு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. முருகப்பெருமானின் அறு படைவீடுகளில் 2வதான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 3ம் நாளான நேற்று காலை மேலக்கோயிலில் இருந்து சுவாமி பூங்கேடயசப்பரத்திலும், அம்பாள் கேடயசப்பரத்திலும் எழுந்தருளி திருவீதி வலம் வந்தனர். மாலையில்சுவாமி குமரவிடங்கப்பெரு மான் தங்கமுத்துகிடா வாகனத்திலும், வள்ளிஅம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளினர். இன்று மாலை மேலக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரபவாகனத்திலும் எழுந்தருளுகின்றனர்.