திருவாடானை: திருவாடானை அருகே புலியூர் கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை ருக்மணி சமேத கிருஷ்ணர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. லட்சார்ச்சனையும், இரவு 7:00 மணிக்கு விளக்கு பூஜையும் நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். நேற்று சிறப்பு அலங் காரத்துடன் கிருஷ்ணர்,ருக்மணி அருள்பாலித்தனர். அன்னதானம் நடந்தது.