போடி: போடி டி.வி.கே.கே., நகர் வீரகாளியம்மன் கோயில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெற்றனர்.