கமுதி: கமுதி ராமானுஜம் மடத்தில் கிருஷ்ண ஜயந்தி விழா நடந்தது. கௌரவ உறவின்முறை டிரஸ்டி சேதுமாதவன் தலைமை வகித்தார். இப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கோலாட்டம், கும்மி பாட்டு பாடினர். பின்பு கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடு,பூஜைகள் நடந்தது. கௌரவ உறவின்முறை சார்பில் கிருஷ்ணர் வேடம் அணிந்த சிறுவர்களுக்கு சிறப்புபரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கமுதி சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கௌரவ உறவின் முறை மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் செய்தனர்.