கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில், ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. அந்த கோவிலில், 17ம் ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி உற்சவ நிகழ்ச்சிகள் தொடர்ந்து, 10 நாட்களாக நடைபெற்று வருகின்றன.முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம், அப்பகுதியில் உறியடி விழா நடைபெற்றது. உறியடி கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில், உற்சவ மூர்த்தி அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என, ஏராளமானோர் உறி அடித்தனர்.