புத்தேரி கோவில் மகா மாரியம்மனுக்கு அமாவாசை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2022 11:08
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.இதனை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மன் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம்; 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.