பதிவு செய்த நாள்
27
ஆக
2022
11:08
உடுமலை: உடுமலை பெரியகடை வீதி, ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோவிலில், ஸ்ரீ ஜெயந்தி உற்சவ விழாவையொட்டி, இன்று தெப்போற்சவம் நடக்கிறது.கோவிலில், ஸ்ரீ ஜெயந்தி உற்சவ விழா, கடந்த 20ம் தேதி துவங்கியது. நாள்தோறும், கோவிலில், நாலாயிர திவ்ய பிரபந்த சேவை நடைபெற்று வருகிறது. நேற்று மாலை திருவாய்மொழி பாசுரங்கள் சேவை நடந்தது.சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று, (27ம் தேதி) மாலை, 3:30 மணிக்கு, திருவாய்மொழி பாசுர சேவையும், தெப்போற்சவமும் நடக்கிறது. வரும், 29ம் தேதி மாலை ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.