கொடிப்புலி கருப்புச்சாமி கோயில் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2022 07:09
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கொடிப்புலி கருப்புச்சாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 2ம் கால யாக பூஜைகளை தொடர்ந்து சொக்கலிங்கம் சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டாமை கூட்டம், பங்காளிகள் மற்றும் திருப்பணிக்கு குழுவினர் செய்திருந்தனர்.