போத்தனூர்: சுந்தராபுரம் அருகே முருகா நகரில் ஓம்சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மகா கணபதி, நவக்கிரக ஹோமங்களுடன் துவங்கியது. முன்னதாக பொங்காளியம்மன் கோவிலிலிருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்தல், ஓம்சக்தி விநாயகர், பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் சயனாதி வாசம் உள்ளிட்டவை நடந்தன.
நேற்று அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, வேதபாராயணம், லட்சுமி நாராயண ஹோமம் உள்ளிட்டவையும் தொடர்ந்து நாடி சந்தானம், திரவ்யாஹூதி, கலச புறப்பாடு உள்ளிட்டவை நடந்தன. இதையடுத்து ஓம்சக்தி விநாயகர், பரிவார தெய்வங்கள், கன்னிமூல கணபதிக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, தசதரிசனம், பிரசாதம் வழங்குதல் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை தரிசித்து சென்றனர். ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.