அன்னூர்: உம்மத்தூர் உருகாதேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி நடக்கிறது.
மசக்கவுண்டன்செட்டிபாளையத்தில் மிகவும் பழமையான உம்மத்தூர் உருகாதேஸ்வரி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று வேள்வி பூஜை உடன் துவங்குகிறது. நாளை காலை மற்றும் மாலையில் வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. வருகிற 5ம் தேதி காலை 9:15 மணிக்கு ஆலய கோபுரம், கணபதி, பாலமுருகன், உருகாதேஸ்வரி மாரியம்மன் ஆகியவற்றிற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து தசதானம், தச தரிசனம், கோ பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தாசபளஞ்சிக சமூகத்தினரும் ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.