காரைக்காலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2022 07:09
காரைக்கால்: காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 64 விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 30ம் ஆண்டு ஸ்ரீசக்தி விநாயகர் நகர்வலத்தை முன்னிட்டு புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள ஏழை மாரியம்மன் கோவில்,நேருநகர், மதகடி உள்ளிட்ட 64 இடங்களில் கடந்த 31ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்று நாட்களுக்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு நேற்று இறுதி நாளில் விநாயகர் சிலைகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மதியம் ஏழை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சக்தி விநாயகர் நகர்வலத்தை போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா துவக்கி வைத்தார். பா.ஜ.க.மாநில துணைத்தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். பின்னர் தனித்தனியாக வாகனங்களில் வரிசையாக கொண்டு வரப்பட்டது.பின் பூஜைகள் செய்யப்பட்டு விநாயகர் சிலைகள் வேத முழுக்க வாத்திய முழுக்கங்களுடன் ஊர்வலம் தொடங்கியது. முன்னதாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ். நகர தலைவர் ராஜ்குமார் ஆகியோர் அனைவரைம் வரவேற்றானர். பின்னர் பாதியார்சாலை. பெரியபேட். காமராஜர்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக கிளிஞ்சல்மேடு பகுதியில் உள்ள நடுக்கடலில் அனைத்து விநாயகர்களை விஸர்ஜனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.சிவசங்கரன்.பா.ஜ.க. மாவட்டதலைவர் துரைசோனதிபதி. மாநில துணை தலைவர்கள் அருள்முருகன்.நளினி. மீனாட்சிசுந்தரம், விஜயன்.காங் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நகர்வலத்தில் அசம்பாவித நடைபெறாமல் தடுக்க எஸ்.பி. சுப்ரமணியன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார். கிரிஸ்டிபால்,அறிவுசெல்வம்,லெனில்பாரதி, செந்தில்குமார் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.