Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரியில் 48 விநாயகர் சிலைகள் ... அக்கிரமேசி வாலேஸ்வரி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பயன்பாடற்ற சுகாதார வளாகம் : மாசடைந்த தீர்த்த சுனை நீரால் சிரமப்படும் பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பயன்பாடற்ற சுகாதார வளாகம் : மாசடைந்த தீர்த்த சுனை நீரால் சிரமப்படும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 செப்
2022
07:09

போடி: போடி அருகே தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில் வளாகப் பகுதியில் பயன்பாடற்ற சுகாதார வளாகம், மாசடைந்த தீர்த்த தொட்டி சுனை நீரால் பக்தர்கள் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி ஊராட்சி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடி - தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில்:ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதியில் திருவிழா நடக்கும். எப்போதும் வற்றாத நிலையில் மூலிகை கலந்த சுனை நீர் வரும் வகையில் தொட்டி இங்கு அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுனை நீரில் நீராடுவர். முருகன், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து நீராடி செல்வதற்கு புனித இடமாக உள்ளது. சுனை நீர் தொட்டி அமைந்துள்ள பகுதியில் மண் தூசுகள், குப்பை கழிவுகள் மாசடைந்து கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் நீராட முடியாமல் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருவதோடு, சுகாதாரகேடும் ஏற்பட்டுள்ளது.

ஆண்,பெண் இருபாலருக்கும் தனித்தனியே சுகாதார வளாகம், உடை மாற்றும் அறைக்கான கட்டடம் கட்டப்பட்டும் உரிய பராமரிப்பு, தண்ணீர் வசதி இல்லாமல் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. இதோடு சுனை நீரில் நீராடி வரும் பெண் பக்தர்கள் உடை மாற்ற முடியாமல் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர். பக்தர்கள் பயன் பெறும் வகையில் சுனைநீர் தொட்டியை சுத்தப்படுத்தி, சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar