சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் 48 விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சிங்கம்புணரியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. செப்.2ம் தேதி இரவு விநாயகர் ஊர்வலம் நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 48 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. ஊர்வலத்திற்கு கிராம பிரமுகர் சத்தியசீலன் தலைமை வகித்தார். கணேசன் சிவாச்சாரியார், செல்வம், சிவா, சொக்கநாதபுரம் ஐயப்பசுவாமிகள் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை பேசினார். சகுபர் சாதிக் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஐயப்பன் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சுந்தரம் நகர், பஸ் நிலையம் வழியாக சேவுப்பெருமாள் ஐயனார் கோயில் தெப்பத்தை அடைந்தது. அங்கு அனைத்து சிலைகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் விசர்ஜனம் செய்யப்பட்டது. எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.