நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் பெரிய அக்கிரமசி கிராமத்தில் வாலேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது.
இக்கோயிலில் அருள் பாலிக்கும் விநாயகர், வாலேஸ்வரி, கருப்பணசாமி, இருளப்பசாமி, வீர மாகாளி, இருளாயி, ராக்கச்சி அம்மன், சோனையா ஆகிய சன்னதிகள் புணரமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நேற்று மாலை 6:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரவு முதல் காலையாக பூஜையும், இன்று 2 மற்றும் 3 வது கால யாக சாலை பூஜைகள் நடக்க உள்ளது. நாளை காலை 4 ம் கால யாக பூஜைகள், மகாபூர்ணாகுதிக்குப் பின் 10:10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.