திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2022 07:09
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆக.21 ல் ஞாயிறு உத்ஸவம் துவங்கியது. ஆவணி ஞாயிறு நாட்களில் மகாலெட்சுமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு .அருள்பாலித்தார். பின்னர் காலை 11:00 மணிக்கு தீபராதனை நடந்தது. மேலும் செப்.11ல் இரவு 6: 05 மணிக்கு மகாலெட்சுமி தாயாருக்கு பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்த உள்ளனர். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்கின்றனர்.