மானாமதுரை : மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் புரவி எடுப்பு திருவிழாவிற்காக களி மண்ணால் ஆன புரவிகள் கலை நயத்தோடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் நல்ல மழை பொழிய வேண்டியும், கிராம மக்களின் ஒற்றுமைக்காகவும் புரவி எடுப்பு விழா நடக்கும். கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக இவ்விழாக்கள் நடக்கவில்லை. இந்நிலையில் தற்போது மானாமதுரை அருகே நத்தபுரக்கி, வலசை, கண்மாய்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நல்ல மழை பொழிய வேண்டியும், கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டியும் புரவி எடுப்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக மானாமதுரையில் உள்ள மண்பாண்ட கலைஞர்களிடம் புரவிகள்செய்ய ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து மண்பாண்ட கலைஞர்கள் கலைநயத்தோடு களிமண்ணால் ஆன புரவிகளை தயார் செய்து வருகின்றனர்.மண்பாண்ட கலைஞர்கள் கூறியதாவது:மானாமதுரையில் தயாராகும் புரவிகளுக்கென்று தனி மவுசு உண்டு. அதனால்சுற்றுவட்டார பகுதிகளைசேர்ந்த ஏராளமான கிராமத்தினர் அதிகளவில் ஆர்டர் கொடுக்கின்றனர்.புரவி தயாரிப்பதற்காகமுறைப்படி விரதம் இருந்து கடவுளை வேண்டி பின்னரே தயாரிக்கும் பணியை தொடங்குவோம், என்றனர்.