பதிவு செய்த நாள்
07
செப்
2022
05:09
செஞ்சி: பொன்பத்தி பாஞ்சாலியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 12ம் தேதி நடக்க உள்ளது.
செஞ்சியை அடுத்த பொன்பத்தியில் பொன் விநாயகர், லஷ்மி நாராயணன், பஞ்சபாண்டவர் உடனுரை பாஞ்சாலியம்மன், பச்சையம்மன், செம்பாத்தம்மன், சப்தகன்னியர், முனீஸ்வரன், திருவுடைஈஸ்வரர், கோட்டை முனீஸ்வரன், அம்மச்சார் அம்மன், கெங்கையம்மன், மாரியம்மன், கமலக்கன்னியம்மன், மோக மாரியம்மன், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், நாக தேவதைகள் மற்றும் கிராம தேவதைகளுக்கு திருப்பணிகள் செய்து ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் 12ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு வரும் 9ம் தேதி காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகியன நடக்க உள்ளது. 10ம் தேதி காலை மகாலட்சுமிஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், கோ பூஜை மற்றும் புதிய சிலைகள் கரிக்கோல ஊர்வலம்மும், அன்று மாலை 5மணிக்கு முதல்கால யாக பூஜையும் நடக்க உள்ளது. 11ம் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், 12ம் தேதி காலை 4மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், சிலைகளுக்கு உயிர் தருதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் 9.30 மணிக்கு 10.30 மணிக்குள் கடம் புறப்பாடும், மகா கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது. மாலை 4 மணிக்கு பாமா ருக்மணி சமேத வேணுகோபாலர், அர்சுனன், திரவுபதி திருக்கல்யாண உற்சவமும், இரவு சாமி வீதிஉலாவும் நடக்க உள்ளது.